×

இத்தாலி கடலில் மேலும் 14 சடலங்கள் மீட்பு

ரோம்: தெற்கு இத்தாலிய கடற்பகுதியில் கடந்த வாரம் துருக்கியில் இருந்து வந்த மோட்டார் படகு திடீரென தீப்பற்றியது. இந்த படகில் ஈரான், சிரியா மற்றும் ஈராக்கை சேர்ந்த சுமார் 75 பேர் பயணம் செய்தனர். படகு தீப்பிடித்ததால் அச்சமடைந்த பலர் கடலில் குதித்தனர். இதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானவர்கள் மாயமானார்கள். இந்நிலையில் கடலில் இருந்து உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோரகாவல்படையின் 3கப்பல்கள் ஈடுபட்டுள்ளது.

The post இத்தாலி கடலில் மேலும் 14 சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Italian ,Rome ,Turkey ,southern Italian ,Iran ,Syria ,Iraq ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில் திடீர்...