×

க.பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கரூர், ஜூன் 2: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம், சூடாமணி, சின்னதாராபுரம், மொஞ்சனூர், தென்னிலை மேற்கு மற்றும் கூடலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதை ஆய்வு செய்த கலெக்டர் பிரபு சங்கர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பவித்திரம் ஊராட்சி, பெரிய தாதம்பாளையம் பகுதியில் ஒன்றியம் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.05 லட்சம் மதிப்பில் சமையல் கூடத்தினை புனரமைக்கும் பணி, தும்பிவாடி பகுதியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.59 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் புணரமைக்கும் பணி, சூடாமணி ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் புணரமைக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.

இதே போல், சின்னதாராபுரம் ஊராட்சி மல்லநத்தம் பகுதியில் பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.70 லட்சம் மதிப்பில் தனிநபர் வீடு கட்டி வரும் பணி, கூடலூர் கிழக்கு ஊராட்சி, பனையம்பாளையம் சமத்துவபுரம் வீடுகளை தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.3.90 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி, தென்னிலை மேற்கு பகுதியில் அனைத்து கிராம அணணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25.99 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியை பார்வையிட்டார்.
மேலும், மொஞ்சனூர் ஊராட்சி, தொட்டம்பட்டி பகுதியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருஙகிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.31.70 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி மற்றம் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.58 ஆயிரம் மதிப்பில் சுகாதார வளாகம் புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூர்ணமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி ரவிக்குமார், சொர்ணலதா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post க.பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : K. Paramathi Union ,Karur ,Karur District Paramathi Union ,Bavithram ,Soodamani ,Chinnadharapuram ,Monjanur ,South ,West ,Gudalur ,Paramathi Union ,Dinakaran ,
× RELATED குக்கிராமங்களில் கூட பைப் லைன்...