×

டோக்கியோவில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

டோக்கியோ: தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஜப்பானில் உள்ள பிரபல என்இசி நிறுவன அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீடு மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றிருக்கிறார். டோக்கியோவில் உள்ள உலக அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மின்னணு நிறுவனமான என்இசி பியூச்சர் கிரியேஷன் ஹப் நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், அங்குள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.

குறிப்பாக மன அழுத்தம் இல்லாமல் விமான பயணத்தை மேற்கொள்ள முக அங்கீகாரம் தொழில்நுட்ப பயன்பாடு, வேகமாக சுங்க அனுமதி பெறுவது, காத்திருப்பு நேரத்தை குறைப்பது உள்ளிட்ட நடைமுறை வழிமுறைகள் பற்றி மைய அலுவலர்கள் விளக்கினர். ரயில், சாலை போக்குவரத்து முதல் செயற்கைகோள் தொடர்பு என விண்வெளி வரை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு காண்பது பற்றியும், நிறுவன அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி கூறினர்.

அப்போது தமிழ்நாடு அரசு நிர்வாகத்திலும் பொது பயன்பாட்டு வசதிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றியும் என்இசி நிறுவன அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post டோக்கியோவில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tokyo ,G.K. Stalin ,Tamil Nadu ,NEC ,Japan ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...