×

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சம்

வேலூர் : வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்க வந்திருந்த காதல் தம்பதி தஞ்சமடைந்தனர். காட்பாடி திருமணி கிராமத்தை சேர்ந்தவர் அபிதா(24). இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று தனது காதல் கணவர் சுஜித்குமார் என்பவருடன் வந்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார். அந்த மனுவில், சத்துவாச்சாரியை ேசர்ந்த சுஜித்குமார் என்பவரும், நானும் 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் எனக்கு என், பெற்றோர் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்தனர். நான் அதை ஏற்க மறுத்து, சுஜித்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி வசூரில் உள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டேன். இருப்பினும் எனது பெற்றோரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

The post வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Vellore SP ,Vellore ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...