×

ரஷ்ய எல்லையில் 2ம் நாளாக டிரோன் தாக்குதல்

கீவ்: உக்ரைன் ரஷ்யா எல்லைப் பகுதியில் உக்ரைன் வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறுவதை உக்ரைன் மறுத்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஓராண்டை கடந்து நீடித்து வரும் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் சிதிலமடைந்துள்ளன. இந்த போரின் தொடக்கத்திலேயே, தங்களிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரிமிய தீபகற்பத்தை மீட்போம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

கடந்த 4ம் தேதி ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மீது தாக்குதல் நடத்த உக்ரைன் அனுப்பிய 2 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியிருந்தது. மேலும் உக்ரைன் ரஷ்ய எல்லையில் உக்ரைன் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் ரஷ்ய எல்லைப் பகுதியில் 2வது நாளாக நேற்றும் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள உக்ரைன், ரஷ்ய அதிபருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக மறுப்பு தெரிவித்துள்ளது.

The post ரஷ்ய எல்லையில் 2ம் நாளாக டிரோன் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kiev ,Ukraine ,Russia ,NATO ,Russian border ,Dinakaran ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...