×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. காளையார்குறிச்சியில் நடந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டிருக்கிறது. பட்டாசு ஆலையின் உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மேன் முத்துகருப்பன் மீது வழக்கு பதியப்பட்டது.

சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் கடற்கரை. இவர், ஊராம்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்ட பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மருந்து கலவை தயார் செய்யும் அறையில் மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த மற்றொரு அறை சேதமடைந்தது. சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மம்சாபுரம் குமரேசன்(33), பள்ளபட்டி சுந்தர்ராஜ் (27) ஆகியோர் 100 சதவீதம் தீக்காயம் அடைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி ரிசர்வ் லைன் சிவன் காலனியை சேர்ந்த அய்யம்மாள் (70), இருளாயி (45) ஆகியோர் காயமடைந்தனர். 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.

காயமடைந்த இருளாயி சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த தொழிற்சாலையில் தீயணைப்பு படையினர், வருவாய் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலை மேற்பார்வையாளர் பள்ளபட்டியைச் சேர்ந்த காளியப்பன்,40 என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. காளையார்குறிச்சியில் நடந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டிருக்கிறது

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Sivakasi, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...