- இபிஎஸ்
- விஜிலென்ஸ் பொலிஸ்
- சேலம்
- எடப்பாடி பழனிசாமி
- சேலம் புறநகர் மாவட்டம்
- பிரதம செயலாளர்
- இளங்கோவன்
- தின மலர்
சேலம்: சொத்துக்குவிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட உள்ளது. இதற்காக அவரிடம் எழுத்துப்பூர்வ விசாரணையை விஜிலென்ஸ் போலீசார் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருக்கிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருக்கு சொந்தமான 36 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அவர் நடத்தி வரும் கல்லூரி, நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. இதில் 41 கிலோ தங்கம், 280 கிலோ வெள்ளி, 34.28 லட்சம் ரூபாய், 70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு, வெளிநாட்டு பணம் 5.5 லட்சம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேசும் விசாரணை நடத்துகிறார். இதில் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்த போலீசார் இளங்கோவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கிலுள்ள சந்தேகங்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு இளங்கோவனுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம் அனுப்பி வைத்தனர். அதற்கான பதிலை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்றார்.
The post 41 கிலோ தங்கம், 280 கிலோ வெள்ளி, ரூ.70 கோடி முதலீடு இபிஎஸ் நெருங்கிய நண்பர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: விஜிலன்ஸ் போலீஸ் எழுத்துபூர்வ விசாரணை appeared first on Dinakaran.
