×

பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக 3 உள்நாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது

சென்னை: பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக 3 உள்நாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் மாலை 3.10 மணிக்கு பெங்களூருவில் தரையிறங்க முடியவில்லை. பெங்களூருவில் விமானத்தை தரையிறக்க முடியாததால் இண்டி ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது. கொல்கத்தா, புனேவில் இருந்து பெங்களூரு சென்ற விமானங்க சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்களில் வந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூருவில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் கார் சிக்கி பெண் உயிரிழந்தார்.

The post பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக 3 உள்நாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangalore ,Indigo Airlines ,
× RELATED கதிரவன் கருணையால் உங்கள் இல்லத்தில்...