×

கோயில் திருவிழா கலைநிகழ்ச்சி ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது: நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: கோயில் திருவிழா கலைநிகழ்ச்சி ஆடல், பாடலில் ஆபாசம் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியும், பாதுகாப்பும் கேட்டு பலர் ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி பிறப்பித்த உத்தரவு:
ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அமைதியான முறையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது. அருவருக்கத்தக்க வகையிலோ, ஆபாச முறையிலோ நடனங்கள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறி நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி கலை நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசமும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு நிபந்தனைகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post கோயில் திருவிழா கலைநிகழ்ச்சி ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது: நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Temple Festival ,Madurai ,Temple Festival Artwork ,iCort ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்