×

காந்திபுரம் பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

கோவை, மே 20: கோவை மாநகராட்சி சார்பில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட காந்திபுரம் நகர பேருந்து நிலைய வளாகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் திறந்துவைத்தனர். பின்னர், பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கினர். வெயிலில் இருந்து தப்புவது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை கமிஷனர்கள் ஷர்மிளா, சிவக்குமார், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், கவுன்சிலர் வித்யா ராமநாதன், செயற்பொறியாளர் கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், கோடை வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க, மாநகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் கோடைகால சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.

The post காந்திபுரம் பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Water ,Pandhal ,Gandhipuram Bus Station Complex ,Coimbatore ,Coimbatore Corporation ,Gandhipuram ,station ,Dinakaran ,
× RELATED தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம்...