×

அம்மாபேட்டை அருகே மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது

 

பவானி,மே20: அம்மாபேட்டை அருகேயுள்ள நெரிஞ்சிப்பேட்டை,சின்னப்பள்ளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(52). இவர், தனது வீட்டில் மின்சார மோட்டார் வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 15ம் தேதி வீட்டிலிருந்த மின்மோட்டார் காணவில்லை. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.விசாரணையில், நெரிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (27), சீனிவாசன் மகன் ரஞ்சித் குமார் (23), முகாசிபுதூரைசேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மனோஜ் (21) ஆகியோர் மின்மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார் மின் மோட்டாரை பறிமுதல் செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அம்மாபேட்டை அருகே மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ammapet ,Bhavani ,Senthilkumar ,Nerinchipet, Chinnapallam ,
× RELATED சேலம்: ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்