×

ரயில்வே மேம்பாலத்தின் மீது நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் வீட்டில் திருட்டு

 

வேப்பூர், மே 19: விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் தேவா மனைவி பிரியதர்ஷினி(27). செவிலியரான இவருக்கும், இவரது கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி தகராறு செய்து வந்ததால் மன உளைச்சலில் நேற்று விருத்தாசலம் மணலூர் ரயில்வே மேம்பாலத்தில் ஏறி நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார். அவரை விருத்தாசலம் போலீசார் மீட்டு விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் மணலூர் சேலம் மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத போது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் வைத்திருந்த ரூ.15,000 பணம், இரண்டு ஏடிஎம் கார்டுகள், அவருடைய ஆதார் கார்டு ஆகியவற்றை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. விசாரணை முடிந்து வீட்டிற்கு சென்றபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயில்வே மேம்பாலத்தின் மீது நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Robbery ,Veypur ,Priyadarshini ,Vriddhachalam Manalur ,
× RELATED வேப்பூரில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை