×

டூவீலர் விபத்தில் தொழிலாளி சாவு

 

தேனி, மே 18: தேனி அருகே உள்ள செல்லாயிபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் ஜெயக்குமார் (24) கூலித்தொழிலாளி. கடந்த திங்கள் கிழமை இரவு செல்லாயிபுரத்தில் இருந்து வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழாவிற்காக டூவீலரில் ஜெயக்குமாரும், இவரது நண்பர் லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் காமேஸ்வரனும் சென்றனர். போடேந்திரபுரத்தில் இருந்து உப்புக்கோட்டை செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது காமராஜபுரத்தை சேர்ந்த அரவிந்த் என்பவர் வேகமாக ஓட்டிவந்த டூவீலர், ஜெயக்குமார் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்
தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Theni ,Easwaran ,Chellaipuram West Street ,Jayakumar ,Dinakaran ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு