×

டெங்கு தடுப்பு தினத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்

 

ஈரோடு: டெங்கு தடுப்பு தினத்தையொட்டி ஈரோடு மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தேசிய டெங்கு தடுப்பு தினம் ஆண்டுதோறும் மே மாதம் 16ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாநகராட்சி சார்பில் நேற்று டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்கள், சுகாதார நிலையங்கள் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாம்களில், தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய பயன்பாடற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, குடிநீர் தொட்டிகளை கொசுப்புழுக்கள் உற்பத்தியாகதவாறு, தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post டெங்கு தடுப்பு தினத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dengue Prevention Day ,Erode Corporation ,Dengue… ,Dinakaran ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது