×

மாஜி காதலியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பாஜக தேசிய துணை தலைவரின் மருமகன் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி

ஜார்கிராம்: முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படம், வீடியோவை வெளியிட்ட பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷின் மருமகன் கைது செய்யப்பட்டார்.  மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷின் 24 வயதுடைய மருமகன், ஜார்கிராம் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், ஜார்கிராம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர்கள் பாஜக தேசிய துணை தலைவரின் மருமகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணும், பாஜக நிர்வாகியின் மருமகனும் ஒரே கல்லூரியில் படித்தனர். இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். பின்னர் இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணத்திற்கு அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் எதிர்கால கணவரின் குடும்பத்தினருக்கு தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாஜக நிர்வாகியின் மருமகன் அனுப்பி உள்ளார். மேலும் அதனை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளார்.

அதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளியின் செல்போனை பறிமுதல் செய்துள்ளோம். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்’ என்றனர். இதுகுறித்து பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ‘எனக்குத் தெரிந்தவரை இருவரும் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாக இருந்தனர். கல்லூரியில் அவர்களின் உறவு மற்றும் அதன் பிறகு அது எவ்வாறு சென்றது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார்.

The post மாஜி காதலியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பாஜக தேசிய துணை தலைவரின் மருமகன் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : National Deputy President of the ,Bajaka ,Maji ,Western Police Action ,Jharkram ,Bajha ,National Vice President ,Dilip Kosh ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...