×

செங்கல்பட்டு அருகே மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதி அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த நோயாளி உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னால் சென்ற வேன் மீது மோதியது. இதனால் அந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற அரசு பேருந்து மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளி உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்ப்பாக வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post செங்கல்பட்டு அருகே மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதி அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Sand ,Chengalpattu ,Brinkalputtu ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!