×

உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி தற்கொலை வழக்கு மீண்டும் விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல்

கோவை, மே 13: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயதான, பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி தனியார் பள்ளியில் படித்து வந்தபோது அங்கே இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிய மிதுன் சக்ரவர்த்தி (35) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
அவரின் தொல்லை தாங்க முடியாமல் அவர் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (52) என்பவரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் இதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து படிக்க முடியாமல் தவித்து வந்து மாணவி விரக்தியில் தூக்குபோட்டு இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதில் இறப்பிற்கு காரணமான நபர்கள், பாலியல் தொந்தரவு அளித்த நபர் குறித்து எழுதி வைத்திருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோவை போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. போலீசார் தற்கொலை செய்த மாணவியின் இறப்பிற்கான காரணத்தை மேலும் தீவிரமாக விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த வழக்கில் மேலும் குற்றவாளிகள் இருப்பதாக தெரிகிறது. விரிவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி தற்கொலை வழக்கு மீண்டும் விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Ukkadam ,Coimbatore ,
× RELATED வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது