×

பட்டாசு வெடித்ததில் 4 பேர் தீக்காயம்

அணைக்கட்டு, மே 13: கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் தீக்காயம் அடைந்தனர். அணைக்கட்டு தாலுகா, வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா கடந்த 10ம் தேதி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வேலங்காடு கிராமத்தில் புஷ்பரத வீதிஉலா நடந்தது. இதையொட்டி நடந்த வாணவேடிக்கையை கிராம மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, பட்டாசில் இருந்து தீப்பொறி சிதறி விழுந்ததில் அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் மனைவி இந்துமதி(30), அவரது மகள் பூஜா(3), முனியப்பன் மனைவி சவுந்தர்யா(28), அவரது மகள் மோகனப்பிரியா(8) ஆகிய 4 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 4 பேரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டாசு வெடித்ததில் 4 பேர் தீக்காயம் appeared first on Dinakaran.

Tags : Amangkatu ,Amakatu taluka ,Velangadu Borkodiyamman ,
× RELATED பாம்பு கடித்து பலியான தொழிலாளி...