×

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவன் காதர் அதானென் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து மோதல் வலுத்துள்ளது. காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஜெருசலேத்தை நோக்கி பாலஸ்தீன தீவிரவாதிகள் நேற்று ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானங்கள், காசாவில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இரு தரப்பிலும் பலி விவரங்கள் குறித்து தகவல் தெரியவில்லை.

The post பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு appeared first on Dinakaran.

Tags : Israel ,Palestine ,Jerusalem ,Islamic Jihad ,Qader Adanen Israel ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்