×

பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என நாங்கள் கருதும் ஒரே நகரம் அகமதாபாத்தான்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் தாக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என நாங்கள் கருதும் ஒரே நகரம் அகமதாபாத்தான் என பாக்., கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார். 2022-2023ம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. அதே நேரம் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேத்தி; இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என நாங்கள் கருதும் ஒரே நகரம் அகமதாபாத்தான்; அங்கு இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடத்தப்படவுள்ளது என்ற செய்தியை பார்த்ததும், இந்தியாவுக்கு வந்துவிடாதீர்கள் என இதற்கு மேல் மறைமுகமாக சொல்ல முடியாது என தோன்றியது. சென்னை அல்லது கொல்கத்தாவில் போட்டியை நடத்த முடிவு செய்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

The post பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என நாங்கள் கருதும் ஒரே நகரம் அகமதாபாத்தான்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Ahmedabad ,Pakistan ,Pak. Cricket Board ,Taku ,Islamabad ,Pakistan team ,Cricket Board ,President ,Thakku ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கூரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல்