×

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

 

கோவை, மே 9: அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் அரசு கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதனை அடுத்து 3 மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்த போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனவும், எனவே அதனை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

The post கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Government Hospital ,Coimbatore ,Coimbatore government ,Dinakaran ,
× RELATED வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது