×

சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது

 

ஈரோடு,மே 9: ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய நசியனூர் முல்லாம்பட்டியை சேர்ந்த தேவராஜ்(51),கோகுல் பிரசாந்த்(22),ஈரோடு நகர் கவின்(28), சின்னம்பாளையம் குமரவேல்(25),மோனிஷ்குமார்(25) ஆகிய 5 பேரை கைது செய்து, 2 சேவல்கள், ரூ.1,070 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பவானிசாகர் அணை பகுதியில் சேவல் சண்டை நடத்தியதாக பெரியகள்ளிப்பட்டியை சேர்ந்த பழனிசாமி(31) என்பவரை கைது செய்து, 5 சேவல்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Kanchikovil ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா