×

வீடு மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்; 3 பெண்கள் பலி: பாராசூட் உதவியுடன் உயிர் தப்பிய விமானி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பலியானார்கள். ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர் விமான தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 போர் விமானம் நேற்று காலை வழக்கமான ரோந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. ஹனுமன்கர் மாவட்டம், தப்லிஅருகே போர் விமானம் சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை உணர்ந்த விமானி விமானத்தை பொதுமக்கள் இல்லாத இடத்தில் தரையிறக்க முயன்றார். எனினும் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் அவர் உடனடியாக பாராசூட் மூலமாக விமானத்தில் இருந்து குதித்து உயிர்தப்பினார். இதனை தொடர்ந்து விமானம் குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்தது. இதில் வீடு முழுவதும் இடிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த 3 பெண்கள் பலியானார்கள். மேலும் 3 பேர் காயமடைந்தனர். விமானத்திலிருந்த விமானி காயங்களுடன் உயிர்தப்பினார். சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

The post வீடு மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்; 3 பெண்கள் பலி: பாராசூட் உதவியுடன் உயிர் தப்பிய விமானி appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Force ,Rajasthan ,Ganganagar district of Rajasthan ,
× RELATED பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: சச்சின் பைலட் கருத்து