×

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 

சேந்தமங்கலம், மே 8: கொல்லிமலையில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம், செம்மேடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, வாழவந்தி நாடு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், அவைத்தலைவர் செல்வம், ஒன்றிய துணை செயலாளர்கள் சீரங்கன், பழனிசாமி, சிந்தாமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தனசேகரன், தங்க பொண்ணு, துணைத் தலைவர்கள் பிரபாகரன், பழனிசாமி, நீலாமணி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் நேரு, ஐடி ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Senthamangalam ,Semmedu ,Kollimalai ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்