×

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

நாமக்கல், மே 19: நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி ஊராட்சி கிழக்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் கொண்டப்பன். இவரது மனைவி பழனியம்மாள்(55). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள கோயில் பொது கிணற்றில் பழனியம்மாளின் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த, நாமக்கல் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மிதந்த பழனியம்மாளின் சடலத்தை மீட்டனர். நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பழனியம்மாளின் சடலத்தை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக பழனியம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கிணற்றில் குதித்து பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kondappan ,East Balapatti ,Chellappampatti Panchayat ,Palaniammal ,
× RELATED கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண்