×

சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்

சேந்தமங்கலம், மே 12: சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஹரிகரன், பவானி குற்றவியல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, தேனி மாவட்டத்தில் பணியாற்றி வந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேல்மயில், சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஹரிஹரன், சேந்தமங்கலம் பகுதிகளில் நடந்த வழிப்பறி அடிதடி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கி உள்ளார். சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Harikaran ,Bhavani criminal court ,Velmail ,Theni district ,Senthamangalam Criminal Court ,Senthamangalam… ,Dinakaran ,
× RELATED மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்