உடுமலை, மே 8: உடுமலை அருகே ரூ.16 கோடி நிதி ஒதுக்கியும் பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி துவங்காததால் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. இது பிஏபி தொகுப்பு அணைகளில் கடைசி அணையாகும். இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வழியாக பாலாறு மூலமும் அணைக்கு தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து நான்கு மண்டலமாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இது தவிர, 6 கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
The post ரூ.16 கோடி நிதி ஒதுக்கியும் பிஏபி பிரதான கால்வாய் சீரமைப்பு பணி தாமதம் appeared first on Dinakaran.