×

(வேலூர்) இடியுடன் கூடிய கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி குடியாத்தம் சுற்றுப்பகுதியில்

குடியாத்தம், மே 7: குடியாத்தம் சுற்றுப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக வாட்டி வந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பெரும்பாடி, அக்ரஹாரம், கன்னிகாபுரம், நெல்லூர் பேட்டை, மூங்கப்பட்டு, எர்த்தாங்கல், கொண்ட சமுத்திரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. தொடர் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் குடியாத்தம் நகரத்தில் சாலைகளில் இருபுறமும் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

The post (வேலூர்) இடியுடன் கூடிய கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி குடியாத்தம் சுற்றுப்பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Gudiatham ,Gudiattam ,Dinakaran ,
× RELATED டாக்டரின் போலி கையெழுத்து, சீலுடன்...