×

தேனி-சீப்பாலக்கோட்டை பல்லாங்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை

தேனி: தேனியில் இருந்து சிப்பாலக்கோட்டை செல்லும் சிதிலமடைந்த மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனியில் இருந்து சீப்பாலக்கோட்டைக்கு செல்லும் வகயைில் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை உள்ளது. கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரெங்காபுரம், வெங்கடாசலபுரம், ஜங்கால்பட்டி வழியாக சீ்ப்பாலக்கோட்டை செல்வதற்கான மாநில நெடுஞ்சாலை உள்ளது.இச்சாலையில் வெங்கடாசலபுரம் அருகே நாகலாபுரம் செல்லும் சாலையில் பல இடங்களில் சாலைகள் சிதிலமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இச்சாலையில் வரும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. விபத்தை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத் துறை விரைவில் இச்சாலைய சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்….

The post தேனி-சீப்பாலக்கோட்டை பல்லாங்குழி சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Theni-Seepalakottai Pallanguzhi road ,THENI ,Sipalakottai ,Dinakaran ,
× RELATED தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்