×

திருச்சி மாவட்டத்தில் அதிகாலை கொட்டி தீர்த்த கனமழை

 

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. புள்ளம்பாடியில் 88.4.மி.மீட்டர் மழை பதிவானது. திருச்சியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய சாரல் மழை, நேற்று காலை 8 மணி வரை பெய்தது. இதனால், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக பல்ேவறு பகுதிகளில் நேற்று அதிகாலை நல்லமழை பொழிவு இருந்தது. இதனால் பல இடங்கள் மழைநீர் தேங்கி கிடந்தது. புளியஞ்சோலை பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து அருவிகளில் கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று காலை 6 மணி வரை மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு: கல்லக்குடி 16.4 மி.மீ., லால்குடி 17.4, நந்தியாறு தலைப்பு 125.4, புள்ளம்பாடி 88.4, தேவிமங்கலம் 4.4, சமயபுரம் 38.4, சிறுகுடி 4.8, வாத்தலை அணைக்கட்டு 13, மணப்பாறை 1, பொன்னணியாறு அணைக்கட்டு 22.2, மருங்காபுரி 22.2, முசிறி 1, புலிவலம் 2, தா.பேட்டை 57, துவாக்குடி ஐஎம்டிஐ 47.3, கொப்பம்பட்டி 22, தென்பறநாடு 18, துறையூர் 70, பொன்மலை 12, திருச்சி ஏர்போர்ட் 30.3, திருச்சி ஜங்ஷன் 22, திருச்சி டவுன் 17 என மாவட்டம் முழுவதும் 652.2 மி.மீ., என மாவட்ட சராசரியாக 27.17 என மழையளவு பதிவாகி உள்ளது. தொடர் மழையால் திருச்சி மாவட்டத்தில் பல்ேவறு இடங்கள் குளிர்ந்தது. ஆனால் கந்தக பூமியான திருச்சி மாநகரில் மட்டும் எவ்வளவு தான் மழை பெய்தாலும், போதாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நேற்று பகல் பொழுதில் புழுக்கம் மக்களை வாட்டி வதக்கியது.

The post திருச்சி மாவட்டத்தில் அதிகாலை கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,Pullambadi ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு