×

அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.

 

காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன.

அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது.

காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.

The post அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார். appeared first on Dinakaran.

Tags : 10000 Science Festival Celebration ,Government Middle School ,Kalaiyarkou ,Tamil Nadu Government Integrated School Education Department ,Vanavil Mandra ,10000 Science Festival ,Tamil Nadu ,Chief Education Officer ,Swaminathan ,Sivagangai district ,Panchayat Union Middle School ,Sewalpunjai village ,Kalayarkovil ,Sivaganga District ,Assistant Project Officer ,Peter Lemayu ,STEM ,Coordinator ,Jaganathan ,District Education Officer ,Sakaya Selvan ,District Resource Center ,Supervisor ,Kasthuribai ,Arogya Bhaskar ,Tamil Nadu Science ,Movement ,Sivagangai ,District Secretary ,Arogyasamy ,Jayapiriya ,Kalayarkou Scientific ,Arogya Christy ,Saritha ,Tamil Nadu Science Movement District Executive Committee ,Alexander Durai ,Gauripatti village ,Pandichelvi ,Kalaiyarko ,Tamil Nadu Government Unified School Education Department ,Vanavil ,Forum ,Thousand Thousand Science Festival ,Chevalpunjai village ,Sivaganga ,District ,Assistant Program Officer ,Tamil ,Nadu Science Movement ,Kalayarkovi ,Jayapriya ,Search ,
× RELATED கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள் தலைமை ஆசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட்