×

பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மே 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது, கர்ப்பிணியான பில்கிஸ் பானு 11 பேர் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த கும்பல் 14 பேரை எரித்து கொன்றது. இந்த வழக்கில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு கருணை அடிப்படையில் கடந்தாண்டு விடுவித்தது. இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப், பிவி. நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய மற்றும் குஜராத் அரசுகளின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் பானோவைத் தவிர தாக்கல் செய்யப்பட்ட வேறு மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தார். பின்னர், பாதிக்கப்பட்டோர் தரப்பில் பானுவின் மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்,” என்று வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மே 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Filkis Panu ,New Delhi ,2002 Gothra train combustion ,Gujarat ,Bilkis Panu ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...