ஈரோடு, மே 3: ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் நேற்று மதியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின் தலைமையாசிரியை சுமதியிடம், பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை, மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி மற்றும் கழிவறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா?, தூய்மை பணியாளர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா? என கேட்டறிந்தார்.
தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியைகள், பள்ளிக்கு கூடுதலாக புதிய வகுப்பறை கட்டிட தர வேண்டும், பள்ளியின் முன்புறம் பெயர் பலகை வைத்தல், பள்ளி வளாகம் முழுவதும் வர்ணம் பூச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட மேயர் நாகரத்தினம் அப்பணிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பிரவீணா, ரேவதி, நந்தகோபு ஆகியோர் உடன் இருந்தனர்.
The post மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.
