×

ருதுராஜுக்கு ஆரஞ்சு தொப்பி

ஐபிஎல் 14வது சீசனில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் வசப்படுத்தினார். 13 போட்டியில் 626 ரன் குவித்து முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுலை அவர் நேற்று முந்தினார். ருதுராஜ் 16 போட்டியில் 635 ரன்னுடன் முதலிடம் பிடித்தார்.  டு பிளெஸ்ஸிக்கு ‘லைப்’ ஐபிஎல் தொடரில் தனது 100வது போட்டியில் நேற்று களமிறங்கிய சிஎஸ்கே தொடக்க வீரர் டு பிளெஸ்ஸி 2 ரன் மட்டுமே எடுத்திருந்தபோது ஷாகிப் பந்துவீச்சில் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை கேகேஆர் கீப்பர் கார்த்திக் நழுவவிட்டார். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர் 35 பந்தில் அதிரடியாக அரை சதம் அடித்து ஷிகர் தவானை (16 போட்டியில் 587 ரன்) பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு முன்னேறினார்.  அதிரடியை தொடர்ந்த டு பிளெஸ்ஸி, பஞ்சாப் கிங்சின் கே.எல்.ராகுலை 3வது இடத்துக்கு தள்ளினார். சிஎஸ்கே இன்னிங்சின் கடைசி பந்தில் 3 ரன் எடுத்தால் ருதுராஜையும் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியை அபகரிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், விக்கெட்டை இழந்து 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். ஐபிஎல் 14வது சீசன் ரன் குவிப்பில் முதலிடம் பிடிப்பது யார் என்பதில் நேற்று நிலவிய கண்ணாமூச்சி ஆட்டம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.* சென்னை அணி முதல் முறையாக ரெய்னா இல்லாமல் ஐபிஎல் பைனலில் களமிறங்கியது.* கேகேஆர் அணிக்காக 3 ஐபிஎல் பைனலிலும் விளையாடிய வீரர்கள் என்ற பெருமை ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைனுக்கு கிடைத்துள்ளது.* டி20 போட்டிகளில் கேப்டனாக, எம்.எஸ்.தோனி விளையாடும் 300வது போட்டி இது….

The post ருதுராஜுக்கு ஆரஞ்சு தொப்பி appeared first on Dinakaran.

Tags : Ruduraj ,CSK ,Ruduraj Gaekwad ,IPL season ,Dinakaran ,
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு