×

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் சாவு

 

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள எலவமலை, மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53). இவருக்கு ராஜசேகர் (21) என்ற மகனும், சசிகலா (18) என்ற மகளும் உள்ளனர். ராஜசேகர், பந்தல் போடும் வேலைக்கு சென்று வருகிறார். சசிகலா 11ம் வகுப்பு முடித்துவிட்டு கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி மாலை கபடி பயிற்சிக்கு சென்று வந்த சசிகலாவிடம், இனி கபடி பயிற்சிக்கு செல்லவேண்டாம் என தாய் லட்சுமி கண்டித்ததாக தெரிகிறது. இந்நிலையில் மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Lakshmi ,Movender Nagar, Elavamalai ,Bhawani, Erode District ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா