×

பதவி உயர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தல்

 

திருவாரூர்: கிராம உதவியாளர்களுக்கான பதவி உயர்வு சதவீதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கிராம உதவியாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையிலும், மாநில துணைப் பொதுச் செயலாளர் பாண்டியன், மாநில பிரச்சார குழு செயலாளர் சோழன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தன்மற்றும் பொறுப்பாளர்கள் முருகையன், பாலமுருகன், கண்ணன்,நாகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில்கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியமாக ரூ 15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்து வரும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமாக மாதம் ரூ 7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும். பதவி உயர்வு பெறுவதற்கு இருந்து வரும் 10 ஆண்டுகளை 6 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக உதவியாளர் போன்ற பதவி உயர்வுகளுக்கு இருந்து வரும் சதவீதத்தினை 50 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பதவி உயர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Village Helper Association ,Thiruvarur ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்