×

சிவன்மலை ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

காங்கயம், ஏப்.30: காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சி மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி தொடங்கி வைத்தார். இதில் சிவன்மலை ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து கண் பரிசோதனை மற்றும் கண் பார்வை குறைபாடு, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் செய்து கொண்டனர். பின்னர் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை சரிசெய்யும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சிவன்மலை ஊராட்சி மன்ற துணை தலைவர் டி.சண்முகம் மற்றும் வார்டு உறுப்பினர் சிவன்மலை சிவகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சிவன்மலை ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Treatment ,Sivanmalai Panchayat ,Kangayam ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே வெடி விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு