×

காரமடை அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: விவசாயி மீது வழக்கு பதிவு

காரமடை: காரமடை அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானது தொடர்பாக விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள மேல்பாவி பகுதியை சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (50). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இங்கு வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளார்.

நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு காளியூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஜெயக்குமார் (34) என்பவரும், அவரது நண்பர்கள் சிலரும் பைக்கில் சென்றனர். பின்னர், இரவு வீடு திரும்புகையில் குப்புசாமி, தனது விவசாயி பயிர்களை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த பேட்டரி மின்வேலியில் சிக்கி ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியான சம்பவத்தில் விவசாயி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் அப்பகுதி மக்கள் உடன்படவில்லை. நள்ளிரவு 12 மணி வரை போராட்டம் நீடித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் எம்எல்ஏ., ஏ.கே.செல்வராஜ் மின்வேலியில் சிக்கி பலியான ஜெயக்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் பலியான வாலிபருக்கு உரிய நிவாரணம், விவசாயி மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் சடலத்தை எடுக்க அனுமதித்தனர். இதனையடுத்து சடலத்தை காரமடை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காரமடை அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: விவசாயி மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Walliper ,Karamadaw ,Karamadda ,Walliber ,Karamad ,Dinakaran ,
× RELATED வாலிபர் சரமாரி வெட்டி கொலை, உடலை...