×

வாலிபர் சரமாரி வெட்டி கொலை, உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுப்பு; கொலையாளிகளை கைது செய்ய தீவிர விசாரணை

ஊத்துக்கோட்டை: வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்த விவகாரத்தில், கொலையாளிகளை கைது செய்யும் வரை  பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஜார்ஜ் என்பவரின் மகன் ராபின் (26).   இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் தனது  நண்பர் கமல் ஓட்ட அவருக்கு பின்னால் அமர்ந்து திருமணத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது, ராபினை மர்ம நபர்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள  திருவள்ளூர் சாலை பெட்ரோல் பங்க் அருகில் சராமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து டிஎஸ்பிகள் சந்திரதாசன், குமரவேல், இன்ஸ்பெக்டர்கள்  ஏழுமலை, வெங்கடேசன், தணிகைவேல் ஆகியோர் தலைமையில் 5 தனிபடை  அமைத்து முதல் கட்டமாக சந்தேகத்தின்பேரில் 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்,  ராபினின் உறவினர்கள் போலீசார் குற்றவாளிகளை பிடிக்கும் வரை நாங்கள் ராபினின் உடலை வாங்கமாட்டோம் என காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கூறிவிட்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து,  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்  நீலவானத்து நிலவன்  முன்னிலையில்  ராபினின் உடலை வாங்குவது குறித்த காவல் நிலையத்தில், பேச்சுவார்த்தையை நேற்று பிற்பகல் மீண்டும் நடத்தினர். இதில் ராபின் தந்தை ஜார்ஜ் `என் மகனை  வெட்டி கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை, நான் என் மகன் உடலை வாங்க மாட்டேன்’என கூறினார்.  அவருடன் அவரது உறவினர்களும், அப்பகுதி மக்களும்  உடலை வாங்க மறுத்து விட்டனர். எனவே, போலீசார் ராபினை கொலை செய்தது கூலிப்படையினராகத்தான் இருக்க வேண்டும் என்றும் அல்லது வேறு யாரையாவது கொலை செய்வதற்கு பதிலாக ராபினை கொலை செய்து விட்டார்களா என்று பல கோணங்களில்   விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் இரண்டாவது நாளான நேற்றும்  ஊத்துக்கோட்டையில் பரபரப்பு காணப்பட்டது.    …

The post வாலிபர் சரமாரி வெட்டி கொலை, உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுப்பு; கொலையாளிகளை கைது செய்ய தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Walliper ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?