×

பூந்தமல்லி அருகே நள்ளிரவில் கார்மீது வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டி பாஜ மாநில நிர்வாகி படுகொலை: எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரண்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நேற்றிரவு காரில் சென்ற பாஜ மாநில நிர்வாகியை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது. பின்னர் காரின்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் குண்டு வெடித்து காரின் முன்பகுதி பலத்த சேதமானது. உயிர் தப்ப காரில் இருந்து இறங்கி ஓடிய அவரை அக்கும்பல் ஓட ஓட விரட்டி வீச்சரிவாளால் சரமாரி வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றது. கொலை கும்பலை தீவிரமாக தேடிவந்த நிலையில் 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் பிபிஜிடி.சங்கர் (43). இவர், தமிழக பாஜவில் எஸ்சி/எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததுடன், பிரபல ரவுடியாகவும் வலம் வந்திருக்கிறார். இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்றிரவு காரில் சங்கர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவரது கார் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை சிக்னல் அருகே வந்தது. அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சங்கரின் காரை வழிமறித்தது. பின்னர் அந்த காரின்மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் அந்த குண்டுகள் வெடித்ததில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

இதை பார்த்ததும் பாஜ பிரமுகர் சங்கர் உயிர் தப்ப காரிலிருந்து இறங்கி ஓடினார். அவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி சென்று, வீச்சரிவாளால் சரமாரி வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட பிபிஜிடி.சங்கர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்புதூரில் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலரும் தொழிலதிபருமான பிபிஜி.குமரனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி காவல் ஆணையரக உயர் அதிகாரிகளும் நசரத்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிபிஜிடி.சங்கரின் சடலத்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நசரத்பேட்டை பகுதியில் பாஜ மாநில நிர்வாகி பிபிஜிடி.சங்கர் கொலை செய்யப்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பதட்டம் நிலவியது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு

நடந்தது எப்படி?: 5 தனிப்படைகள் மேற்கொண்டுள்ள விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு பாஜ பிரமுகர் சங்கர் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை கொளத்தூரில் இருந்து 2 கார்களில் மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்திருக்கிறது. பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை சிக்னலில் சங்கரின் கார் நின்றது. டிரைவரின் சீட்டுக்கு அருகே சங்கர் அமர்ந்திருப்பதாக நினைத்து, அந்த பக்கத்தில் மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. ஆனால் காரை சங்கர் ஓட்டி வந்ததால், அவர் வெடிகுண்டு தாக்குதலில் உயிர் தப்பி, கையில் கத்தியுடன் காரிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார். இதில் நிலைகுலைந்த மர்ம கும்பல், சங்கரை வீச்சரிவாளால் சரமாரி வெட்ட முயற்சித்தனர். எனினும் அவர் கையில் இருந்த கத்தியால், தன்னை தாக்க வந்தவர்களை வெட்டுவது போல் பாவ்லா செய்தபடி தப்பியோடியிருக்கிறார். அவரை மர்ம கும்பல் பின்தொடர்ந்து ஓட ஓட விரட்டி, அவரது கையில் இருந்த கத்தியை பிடுங்கியது. பின்னர் அவரை வீச்சரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்திருக்கிறது. இவரது நெருங்கிய நண்பர் குமரன் கொலை செய்யப்பட்டது போலவே, சங்கரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

The post பூந்தமல்லி அருகே நள்ளிரவில் கார்மீது வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டி பாஜ மாநில நிர்வாகி படுகொலை: எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Baja ,Elethampur court ,Administrator ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்