×

ஜி-7, குவாட் உச்சி மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒன்றிணைந்து ஜி-7 என்ற அமைப்பை உருவாக்கின. ஜி-7 உச்சி மாநாடு வரும் மே19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-7 தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதே போல், ஆஸ்திரேலியா, சிட்னியில் அடுத்தமாதம் 24ம் தேதி குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கிறது. குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார். இதில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஜி-7, குவாட் உச்சி மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,G-7, ,Quad Summit ,New Delhi ,Canada ,France ,Germany ,Italy ,Japan ,Britain ,United States ,G-7, Quad Summit ,Modi ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி