×

திருச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்றபோது சாலை விபத்தில் இறந்த பேரனுக்கு இழப்பீடு வேண்டும்-வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு

வேலூர் : திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்றபோது சாலை விபத்தில் இறந்த பேரனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தம்பதி புகார் மனு அளித்தனர்.வேலூர் சைதாப்பேட்டை பழைய முன்சீப் கோர்ட் தெருவை சேர்ந்தவர் காஞ்சனா. இவரது மகன் ஆனந்த்(26). இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சில நாட்கள் பின்னர் மகன் இறந்த துக்கம் தாளாமல் காஞ்சனாவும் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காஞ்சனாவின் பெற்றோரான சிட்டிபாபு, லோகம்மாள் நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நானும், எனது கணவரும், மகள் கஞ்சனா, பேரன் ஆனந்த் ஆகியோரது அரவணைப்பில் வாழ்ந்து வந்தோம். இருவருமே இறந்து விட்டனர். இதனால் நாங்கள் ஆதரவின்றி வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனது பேரன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதால் தொடர்ந்து பைக் ஓட்டிய விபத்தில் சிக்கி உயிரிழந்தான். எனவே விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நபர் சார்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் போதிய இழப்பீடு வழங்கவில்லை. எனவே கூடுதல் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

The post திருச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்றபோது சாலை விபத்தில் இறந்த பேரனுக்கு இழப்பீடு வேண்டும்-வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Vellore SP ,Trichy ,Vellore ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்