×

மாதர் சம்மேளன மாநாடு

 

ராயக்கோட்டை, ஏப்.26: இந்திய மாதர் தேசிய சம்மேளன கிருஷ்ணகிாி மாவட்ட 12வது மாநாடு, அதன் தலைவர் சுபத்ரா தலைமையில் நேற்று நடந்தது. மாநில தலைவி பத்மாவதி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார். சூர்யா வரவேற்றார். மாநில துணை செயலாளர் சுந்தரவல்லி துவக்கவுரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமைய்யா வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ஷியாமளா வேலை அறிக்கையை முன்வைத்தார்.

மாநில செயலாளர் மஞ்சுளா நிறைவு உரையாற்றினார். கலாசேத்ரா பாலியல் குற்றங்களில் அனைவரையும் கைது செய்ய வேண்டும், பாலியல் புகார் குழுக்கள் அனைத்து பணியிடங்களிலும் அமைக்க வேண்டும், முதியோர் பென்ஷன் முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைவராக ஷியாமளா, துணை தலைவராக அஸ்வினி, செயலாளராக சூர்யா, துணை செயலாளர் ராஜேஸ்வாி, பொருளாளராக சுபத்ரா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

The post மாதர் சம்மேளன மாநாடு appeared first on Dinakaran.

Tags : Mathar Sammelana Conference ,Rayakottai ,Indian ,Mathar ,National Sammelana ,Krishnagi District ,president ,Subatra ,Dinakaran ,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை