×

இளம்பெண் கொலை வழக்கில் தண்டனை பயம் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

 

மேட்டுப்பாளையம், ஏப்.26: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச்சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகன் ஜெனித்(24). இவர் தற்போது மேட்டுப்பாளையம் அருகே குரும்பனூர் பகுதியில் தங்கி அங்குள்ள சிப்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெனித் தொடர்புடையவர் என்றும், இதனால் தமக்கு தண்டனை கிடைத்து விடுமோ என்ற பயத்தில் கடந்த சில தினங்களாகவே அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கொலை வழக்கு சம்பந்தமாக கோவை நீதிமன்றத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது அறைக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு சென்று மயங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த ஜெனித்தின் உறவினர் முருகன் என்பவர் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மதுவுடன் தென்னை மரத்திற்கு அடிக்கும் பூச்சிகொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளதாகவும், உடனடியாக கோவைக்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து அவரை கோவைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இளைஞர் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்டனைபயத்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இளம்பெண் கொலை வழக்கில் தண்டனை பயம் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,James ,Radhapuram ,Tirunelveli district ,Zenith ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது