கோவை, ஏப்.26: கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக்க உள்ளாட்சிகளுக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிவித்து அதை நிறைவேற்றவேண்டும் என தெரிவித்துள்ளது. மாவட்ட அளவில் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் போன்றவை முழுமையாக முறையாக தடுக்கவேண்டும். உற்பத்தி செய்யக்கூடாது. வெளி மாநிலங்களில் இருந்து தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தினமும் சுமார் 5 டன் எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குவிகிறது. வாரந்தோறும் 35 முதல் 40 டன் பிளாஸ்டிக் குவிவதாக உள்ளாட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சியில் குவியும் பிளாஸ்டிக் மற்றும் இதர உள்ளாட்சிகளில் குவியும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க, அவற்றை தனியார் சிமெண்ட் நிறுவனத்தினம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்துவார்கள். மேலும் ரோடு போடவும் பிளாஸ்டிக் பயன்படுகிறது. இது தொடர்பாக சிமெண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குவிந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து ஒப்படைத்தால் அவற்றை பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். கோவையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கிடையாது. வெளியூர் வெளிமாநிலத்தில் இருந்து வருகிறதா என பல்வேறு துறையினர் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. தடையை முழுமையாக அமலாக்கி பிளாஸ்டிக்கை வெகுவாக தவிர்க்கலாம். பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. உள்ளாட்சிகள் பிளாஸ்டிக் தடையை கடுமையாக பின்பற்றவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
The post ரோடு போட பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.
