×

ஆத்தூர் உள்பட 4 இடங்களில் ரூ.2.50 கோடியில் நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகள் துவக்கம்

 

நிலக்கோட்டை, ஏப். 26: ஆத்தூர் உள்பட 4 இடங்களில் ரூ.2.50 கோடி மதிப்பில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. ஆத்தூர், சித்தரேவு, மட்டப்பாறை, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை நிறைவேற்றும் விதமாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் ஆத்தூர் உள்பட 4 பகுதிகளிலும் நிரந்தர நேரடி நெல் ெகாள்முதல் நிலைய கிடங்குகள் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இதையொட்டி 4 நெல் கொள்முதல் நிலையங்களுக்கும், ஆத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திண்டுக்கல் மண்டல மேலாளர் மெர்லின் பாரதி தலைமை வகிக்க, துணை மண்டல மேலாளர் நலவழுதி முன்னிலை வகித்தார். நெல் கொள்முதல் நிலைய அலுவலர் பாலன் வரவேற்றார். விழாவில் 4 நெல் கொள்முதல் நிலையங்களுக்கான பணிகளை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளர் உமா மற்றும் வேளாண்மை துறையினர், வருவாய் துறையினர், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். உதவி பொறியாளர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.

The post ஆத்தூர் உள்பட 4 இடங்களில் ரூ.2.50 கோடியில் நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Aathur ,Coalkotta, Ap. 26 ,Dinakaran ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது