×

விட்டலாபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

திண்டிவனம், ஏப். 26: திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கொடியம் கிராமத்தை சேர்ந்த (தற்போது திண்டிவனம் வசந்தபுரத்தில் குடியிருந்து வருகிறார்) சகலகலாதரன் (59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, அப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவி, தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு எடுக்க சென்றபோது, தலைமை ஆசிரியர், அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி, தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரோசணை காவல் நிலைய போலீசார், பள்ளி மாணவி மற்றும் தலைமை ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டிய தலைமை ஆசிரியர், காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவிட்டுள்ளார்.

The post விட்டலாபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vittalapuram Govt School ,Headmaster ,District Principal Education ,Tindivanam ,Vitthalapuram ,Kodiyam village ,Vitthalapuram Government School ,District ,Education ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு பாராட்டு விழா