×

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரே நாளில் 2 காட்டு யானைகள் உயிரிழப்பு!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரே நாளில் 2 காட்டு யானைகள் உயிரிழந்தது. காப்பகத்தின் வெளிப்பகுதியில் உள்ள கல்லம்பாளையம் வனப்பகுதியில், இறந்து பல நாட்கள் ஆன பெண் யானையின் உடல் இன்று காலை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மசினகுடி சரகம் அவரல்லா வனப்பகுதியில் மேலும் ஒரு பெண் யானையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கல்லம்பாளையம் மற்றும் மசினகுடி சரகம் அவரல்லா பகுதியில் என 2 இடங்களில் இன்று 2 பெண் யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரே நாளில் 2 காட்டு யானைகள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve ,Kallampalayam forest ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்