×

கர்நாடகாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; கர்நாடகாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்கள் பாஜகவை ஆதரிக்க தயாராக உள்ளனர். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை நமக்கான கட்சி என நினைக்கிறார்கள். ஏப்ரல் 25,26ல் ஒன்றிய அமைச்சர்கள் பலர் பரப்புரைக்காக கர்நாடகா வர உள்ளனர். வகுப்பறையில் ஹிஜாப் மட்டுமல்ல, காவி உடையும் வேண்டாம் என்கிறோம். கர்நாடகாவில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக 224 தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். ஒரு வேட்பாளர் 2 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளவர்கள் பற்றி இங்கு பேசுவது நன்றாக இருக்காது எனவும் கூறினார்.

The post கர்நாடகாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Bengaluru ,Annamalai ,Karnataka ,Karnataka Legislative Assembly ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...