×

சிவகங்கையில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை

 

சிவகங்கை, ஏப்.24: சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்பட உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையைன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிவகங்கை தொகுப்பு துணை மின் நிலைய உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சிவகங்கை தொழிற்பேட்டை, 48 காலனி, குறிஞ்சி நகர், ஆரியபவன் நகர், ரோஸ் நகர், பால் பண்ணை, ராகினிப்பட்டி, போலீஸ் குவாட்டர்ஸ், பழமலை நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பட்டமங்கலம் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் மதகுபட்டி, தச்சம்பட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, ஒக்கூர், காளையார்மங்கலம், அய்யம்பட்டி, கொழுக்கட்டைப்பட்டி, அண்ணா நகர், ஒ.புதூர், நாலுகோட்டை, கருங்காபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதையொட்டி காளையார்கோவில் மூர்த்தி நகர், கிருஷ்ணா நகர், சிலையா ஊரணி, அய்யனார்குளம், அரிய நாச்சி குடியிருப்பு, காளக்கண்மாய், நூத்தன் கண்மாய், எஸ்.எஸ்.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதையொட்டி மறவமங்கலம், சிரமம், சமத்துவபுரம், வேளாரேந்தல், நந்தனூர், சேம்பார், புல்லுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Siwaganga ,Sivaganga ,Sivagangai ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது